விஜய் 62 படப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்

       பதிவு : Feb 19, 2018 11:28 IST    
students education struggle at pachaiyappa college due to thalapathy 62 movie shooting students education struggle at pachaiyappa college due to thalapathy 62 movie shooting

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது விஜயின் 62வது படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. சென்னையில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் அனுமதி பெற்றிருந்தனர்.

இதனால் நேற்று அந்த இடத்தில விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் நடிகர் விஜய் கல்லூரி வளாகத்திற்கு வந்திருக்கும் செய்தி மாணவர்களிடையே பரவியதும். மாணவர்கள் கலோரியை விட்டு வெளியேறி படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க குவிந்துள்ளனர்.

 

இதனால் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமல் போனது. இது குறித்து கல்லூரி முதல்வர்களிடம் ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் கூறியுள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் படக்குழுவினரை தொடர்பு கொண்ட கல்லூரி முதல்வர் "படப்பிடிப்பை கல்லூரி வேலை நேரம் முடிந்ததும் வைத்து கொள்ளுங்கள், இப்போது நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது" என்று கூறியுள்ளார்.

இதன்பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் கல்லூரி நேரம் முடிந்து மாணவர்கள் வெளியேறிய பிறகு படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது. இனிமேல் பச்சையப்பா கல்லூரியில் எந்த படப்பிடிப்பு நடத்தவும் அனுமதிக்க கூடாது என்று ஆசிரியர்களும், மாணவர்களும் கூறியதை முதல்வர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

 


விஜய் 62 படப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்