ads

விஜய் ஆண்டனியுடன் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபலம்

விஜய் ஆண்டனியுடன் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபலம்

விஜய் ஆண்டனியுடன் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபலம்

அண்ணாதுரை, காளி படத்தினை தொடர்ந்து ‘டிராஃபிக் ராமசாமி' என்ற படத்தில் இணையவுள்ளார். இந்த படம் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பற்றிய வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்க உள்ளது. படத்தில் இளைய தளபதி விஜய்யின் தந்தை  எஸ்.ஏ.சந்திரசேகர் டிராஃபிக் ராமசாமி வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஆண்டனி நாயகனாக நடிப்பதோடு சமுதாயத்தின் மீது அக்கறை உள்ள இளைஞனாகவும் நடிக்கிறார்.  

  எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இணைந்து 5 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஜய் விக்ரம் இப்படத்தினை இயக்க உள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சுக்ரன்' படத்தின் மூலம் ஆண்டனியை முதல் முதலாக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினர். அதன் பின்னர் இப்படத்தின் மூலம் மீண்டும் இணையயுள்ளனர்.  

ஈரோடு மோகன் தயாரிக்கும் இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, அம்பிகா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், மதன்பாப், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

விஜய் ஆண்டனியுடன் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபலம்