விஜய் ஆண்டனியின் காளி சிங்கிள் ட்ராக் ரிலீஸ்

       பதிவு : Jan 18, 2018 17:53 IST    
vijay antonys kaali single track release vijay antonys kaali single track release

'நான்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்த படத்தினை தொடர்ந்து சலீம், சைத்தான், எமன், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் 'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் முதல் தெலுங்கு திரையுலகம் வரை வெகுவான ரசிகர்கள் வட்டாரத்தை தனக்கென பிடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் மற்றும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதற்கு அடுத்த படியாக ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 'அண்ணாதுரை' படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் மூலம் ஆண்டனி இரு வேடத்தில் நடித்து, எடிட்டிங் செயல்களை முதல் முறையாக மேற்கொண்டிருந்தார். இந்த படம் தெலுங்கில் 'இந்திரசேனா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. 

இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்பொழுது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காளி' மற்றும் ஆண்ட்ரு லூயிஸ் என இரு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் 'காளி' படத்தினை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்' மூலம் அவரே தயாரித்து இசையமைப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, ‘படைவீரன்’ புகழ் அம்ரிதா என நான்கு நாயகிகள் இணைத்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

 

இந்த படத்தில் ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். மேலும் கடந்த நாட்களுக்கு முன்பு வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்த இந்நிலையில் படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை வருகிற 24ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் படத்தின் இசையையும் விரையில் வெளியாகும் என்று வெளிவந்த தகவலில் படக்குழு வெளியிட்டுள்ளது. 


 

 


விஜய் ஆண்டனியின் காளி சிங்கிள் ட்ராக் ரிலீஸ்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்