ads

நடிகர் தனுஷ் தயாரிப்பில் கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் டிவி தீனா

vijay tv dheena plays hero role in dhanush productions new movie

vijay tv dheena plays hero role in dhanush productions new movie

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் 'கலக்க போவது யாரு' மற்றும் 'கேபிவைய் சாம்பியன்ஸ் சீசன்ஸ்' நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் சினிமா துறைகளில் பிரபலமாகி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மற்றும் மக்களை சிரிக்க வைக்கும் ஒரே நோக்கத்தில் செயலாற்றி வருகிறது. சிவகார்த்திகேயன், சந்தானம், மாகாப, ரோபோ சங்கர் போன்ற திரை நட்சத்திரங்கள் விஜய் டிவி மூலம் பிரபலமாகினர். இவர்களை தொடர்ந்து ஏராளாமான கலைஞர்கள் தங்களது பழமொழி திறமையாலும், நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்து நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நடிகர், நடிகைகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை கலாய்த்து வருகின்றனர்.

சமீபத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை 'சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை' என்று சித்தரித்து காமெடியாக ரசிகர்களுக்கு வழங்கினர். இந்த காமெடியில் ராமர் என்பவரின் 'என்னம்மா நீங்க இப்படி பன்றிங்கலேம்மா' என்ற வசனம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வைரலானது. இந்த வசனத்தை திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் நடிகைகள் தங்களது படங்களில் வசனமாக பேசும் அளவிற்கு வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் 'தீவிர ரசிகன்' என்று தீனா என்பவர் முகம் காட்டாமல் அழைபேசியில் ஆடியன்ஸ், ஜட்ஜஸ், தொகுப்பாளர், விருந்தனர்கள் உள்பட அனைவரையும் பாரபட்சம் பாராமல் கலாய்த்து வருகிறார். இந்த தீவிர ரசிகனின் போன் கால் காமெடி விடியோவானது பலராலும் கவர்ந்து வருகிறது. தீனா என்பவர் தனது நடிப்பினாலும், பேசப்படும் வசனத்தினாலும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் முன்னதாக சில குறும்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ள இரண்டு புது படத்திலும் விஜய் டிவி தீனா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த படம் மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு புதுமுகங்கள் நடித்து 100 நாட்களை கடந்து வெற்றிபெற்ற 'கட்டப்பணியிலே ரித்விக் ரோஷன்' என்ற படத்தின் தமிழ் ரிமேக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்கிய நாதிர்ஷா என்பவர் தனுஷ் தயாரிக்கும் புது படத்தையும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தீனா கதாநாயகனாக நடிக்க உள்ள இந்த படத்திற்கு 'அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை' என்று தலைப்பு பரிசீலனையில் உள்ளதாம்.

நடிகர் தனுஷ் தயாரிப்பில் கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் டிவி தீனா