ads

விஜய் யேசுதாஸின் படை வீரன் ட்ரைலர் வெளியீடு

padai veeran official trailer release

padai veeran official trailer release

கடல், ஓ காதல் கண்மணி போன்ற படங்களில் இயக்குனர் மணிரத்னமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் தனா எழுத்து மற்றும் இயக்கத்தில் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘படைவீரன்’. இந்த படம் கிராமத்து பாணியின் அடிப்படையில் உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பினை போன்று வீரத்திற்கு அதிகளவு முக்கியத்தும் கொடுத்து உருவாகப்பட்டிருக்கிறது. தற்பொழுது படக்குழு இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது. இதனை பார்க்கும் போது நாயகன் விஜய் யேசுதாஸ் ஊரில் சுத்தி திரியும் இளைஞர்களின் ஒருவராக வளம் வருகிறார். அதன் பின்னர் நாயகி அம்ரிதா மீது காதல் கொண்டு வரும் இந்நிலையில் சில காரணத்தினால் விஜய் யேசுதாஸ் காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்று ஆசை படுகிறார்.

 இதனை தொடர்ந்து காவல் துறை அதிகாரியாக யேசுதாஸ் வளம் வருகிறார். இதில் இருந்து படத்தின் பல விறுவிறுப்பான காட்சிகள் ஆரமிக்கிறது. காதல் ஒரு பக்கம் சண்டை காட்சிகள் மறுபக்கம் என படத்தினை பார்க்கும் போது எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘எவோக்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் மதிவாணன் தயாரித்துள்ள இப்படத்தில் பாரதிராஜா,சிங்கம் புலி காமெடிகள் அதிகளவு நிறைந்துள்ளது. மேலும் கிராமத்தின் அடிப்படையில் படம் உருவாகியிருப்பதால் கிராமிய நடனங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் ஒயிலாட்டம் இடம் பெற்றுள்ளது.  இந்நிலையில் நடிகர் தனுஷ் பாடிய  'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா..ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா...'  என தொடங்கும் குத்து பாடலும் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலின் மேக்கிங் வீடியோ கடந்த நாட்களில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.        

விஜய் யேசுதாஸின் படை வீரன் ட்ரைலர் வெளியீடு