ads

மதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்

vijaykanth wishes to madura veeran movie

vijaykanth wishes to madura veeran movie

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான பிஜி முத்தையா இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'மதுர வீரன்'. இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முகபாண்டியன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மீனாட்சி இணைந்துள்ளார். இந்த படம் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இயக்கத்தில் வெளிவந்துள்ள முதல் படமாகும். இவர் முன்னதாக பூ, சகுனி, சாட்டை, சண்டி வீரன், ராஜா மந்திரி, மன்னர் வகையறா போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த படம் நேற்று (பிப்ரவரி 2) வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தை நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார். படத்தை பார்த்த பின்னர் தற்போது தனது டிவிட்டரில் "மதுர வீரன் படம் பார்த்தேன்.இது ஒரு நல்ல படம். படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியம் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க இந்த படத்தின் இயக்குனரான பிஜி முத்தையா ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். இந்த படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தையும் அதில் இருக்கும் அரசியலையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

மதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்