சண்டகோழி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

       பதிவு : Jan 30, 2018 16:29 IST    
sandakozhi 2 shooting schedule updates sandakozhi 2 shooting schedule updates

கடந்த 2004ம் ஆண்டில் வெளிவந்த 'செல்லமே' படத்தின் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த சண்டகோழி, திமிரு, தாமிர பரணி போன்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இவர் நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம்  வேதம், ஏழுமலை போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகராக வளம் வருகிறார்.    

இவரது இரண்டாவது படமான 'சண்டகோழி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. மேலும் 'சண்டகோழி' படத்தினை இயக்கிய லிங்கு சாமி இரண்டாம் பாகத்தையும் இயக்கிவருகிறார். விஷாலின் 25வது படமான 'சண்டகோழி 2' படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி, அஜய், கபாலி விஷ்வானத் இணைந்துள்ளனர். மேலும் முதல் பாகத்தில் நடித்திருந்த ராஜ் கிரண் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.   

 

விஷாலுக்கு சொந்தமான 'விஷால் பிலிம் பேக்டரி' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விஷாலே தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்து முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு நிறைவடைந்து இருப்பதாக ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டிருந்தது. தற்பொழுது வந்த தகவலில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பினை வருகிற பிப்ரவரி மாதம் 3ம் தேதியில் இருந்து திண்டுக்கல் நகரில் நடைபெற இருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.  


சண்டகோழி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்