கும்கி 2வில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக இணைந்த விஷ்ணு விஷால்

       பதிவு : May 28, 2018 12:22 IST    
கும்கி 2 படத்தில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து வருகிறார். கும்கி 2 படத்தில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து வருகிறார்.

நடிகர் பிரபுவின் மகன் மற்றும் சிவாஜி கணேசனின் வாரிசு நடிகரான விக்ரம் பிரபுவின் முதல் படம் 'கும்கி'. விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தை கிங், லீ, மைனா, சாட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி இருந்தார். விக்ரம் பிரபுவின் தமிழ் அறிமுக படமான இந்த படம் சிறந்த புதுமுக நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த கதை உள்ளிட்ட பல விருதுகளை குவித்தது.

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பிரபு சாலமன் கயல், தொடரி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் ஆரம்பித்தார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நாயகனின் சிறு வயது காட்சிகள் படமாக்கப்பட்டது. இதன் பிறகு தற்போது இந்த படத்தின் நாயகன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக விஷ்ணு விஷால் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 

இதற்காக விஷ்ணு விஷால் கேரளா சென்று படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளனர். 


கும்கி 2வில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக இணைந்த விஷ்ணு விஷால்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்