நட்சத்திர கலைவிழாவிற்கு அஜித் ஏன் வரவில்லை - எஸ்வி சேகர் விளக்கம்

       பதிவு : Jan 09, 2018 20:18 IST    
why ajith is not participated in natchathira vizha 2018 why ajith is not participated in natchathira vizha 2018

நடிகர் சங்கம், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணியில் முன்னேறி வருகிறது. இதற்காக நடிகர் சங்கம் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கடந்த 6-ஆம் தேதி மலேசியாவில் நட்சத்திர கலை விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகள் போன்றவைகளை நடத்தியது. இந்த நட்சத்திர விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், கார்த்தி, விஷால் உள்ளிட்ட ஏராளாமான திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால், அஜித், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பியும் ஏன் நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள மறுத்தனர் என்று தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது நடிகர் எஸ் வி சேகர், நடிகர் அஜித் ஏன் நட்சத்திர கலை விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதை விளக்கம் அளித்துள்ளார். அதில் "நடிகர் அஜித்தை விழாவில் கலந்துகொள்ள அழைத்த போது 'ஏற்கனவே மக்களிடம் வசூலிக்கப்படும் டிக்கெட் மூலம் நிறையவே சம்பாதித்துள்ளோம். இதனால் அவர்களிடம் இருந்து பணம் பெறாமல் நாமே பணம் போட்டு கட்டிக்கொள்ளலாம்' என்றார். அதனால் தான் நட்சத்திர கலைவிழாவிலும் அவர் பங்கேற்கவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக நடிகர் எஸ்வி சேகர், நடிகர் சங்க அறங்காவலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

why ajith is not participated in natchathira vizha 2018why ajith is not participated in natchathira vizha 2018

நட்சத்திர கலைவிழாவிற்கு அஜித் ஏன் வரவில்லை - எஸ்வி சேகர் விளக்கம்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்