ads
ஏமாளி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு
வேலுசாமி (Author) Published Date : Jan 19, 2018 12:53 ISTMovie News
சமூகம் சார்ந்த பல படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி தற்பொழுது 'ஏமாளி' படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களை காட்டிலும் 'ஏமாளி' படத்தில் புது வித கெட்டப்பில் களமிறங்கியதோடு நான்கு மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரில் சமுத்திரக்கனியின் தோற்றம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
லதா ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை வி.சட்.துரை இயக்குகிறார். முன்னதாக வெளிவந்த இந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர், இசை போன்றவை வெளிவந்து ராசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தினை வருகிற பிப்ரவரி மாதத்தில் வெளியிடுவதாக சமுத்திரக்கனி அவரது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து தற்போது இந்த படத்தை பிப்ரவரி 2 இல் வெளியிடுவதாக தெரிவித்து புது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏமாளி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு
-   Tags : 
yemaali movie release date announced
yamaali movie official trailer
yamaali movie official teaser
yamaali movie new posters and stills
yamali movie crews and casting
yemaali release from february
samuthirakani new yemaali movie release date announced
ஏமாளி படத்தின் முக்கிய அறிவிப்பு
ஏமாளி வெளியீடு தேதி
ஏமாளி
ஏமாளி படத்தின் ட்ரைலர் டீசர் வெளியீடு
ஏமாளி படத்தின் புதிய தகவல்
yemaali movie release at february 2
Related News
ads