ads

நடன கலைஞராக உருவெடுக்கும் யுவன் சங்கர் ராஜா

yuvan shankar raja dance in raja ranguski promotional song

yuvan shankar raja dance in raja ranguski promotional song

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவரான யுவன் சங்கர் ராஜா பல வெற்றி படங்களாலுக்கு இசையமைத்ததோடு முன்னணி நடிகர்களிடமும் இணைந்து இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்பொழுது யுவன் தயாரிப்பாளராக வளவந்ததினை தொடர்ந்து நடன கலைஞராகவும் உருவெடுத்துள்ளார்.    

மெட்ரோ படத்தின் மூலம் அறிமுகமான சிரிஷ் தற்பொழுது பர்மா படத்தினை இயக்கிய தரணிதரன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகிவரும் 'ராஜா ரங்குஸ்தான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சாந்தினி நாயகியாக நடிக்கிறார். வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குனர் தரணிதரன் தயாரித்து வரும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்ததோடு பாடலையும் பாடியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு நடன கலைஞராகவும் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் புரமோஷன் பாடலுக்காக புதுமுக கலைஞர்களை அறிமுகப்படுத்த விரும்பிய இயக்குனர் தரணிதரன் இறுதியில் யுவனை தேர்வு செய்தார். முதலில் தயக்கமடைந்த யுவன் படக்குழு வற்புறுத்தவே புரமோஷன் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டார்.      

yuvan shankar raja dance in raja ranguski promotional songyuvan shankar raja dance in raja ranguski promotional song

நடன கலைஞராக உருவெடுக்கும் யுவன் சங்கர் ராஜா