ads
யுவன் சங்கர் ராஜா தயாரித்த காதல் படத்தில் பிக் பாஸ் பிரபலங்கள்
ராசு (Author) Published Date : Nov 19, 2017 14:36 ISTMovie News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரும் திரைப்பட துறையில் பல படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் சேர்ந்து ஒரு காதல் படத்தில் நடிப்பதாக தகவல் வந்திருந்தது. கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த கிரகணம் படத்தினை இயக்கிய இளன் இப்படத்தினை இயக்குகிறார்.
இப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா கே ப்ரொடெக்சனுடன் இணைந்து படத்தினை தயாரித்துள்ளார். காதலை மையமாக வைத்து எடுப்பதின் காரணத்தினால் படத்திற்கு 'பியார் பிரேமா காதல்' என்று தலைப்பினை வைத்துள்ளனர். 'பியர்' என்றால் இந்தியில் காதல், 'பிரேமா' என்றால் தெலுங்கில் காதல் அப்படினா படம் முழுக்க காதல் இருக்கும் என்று தெரிகிறது.
இப்படத்தின் பஸ்ட் லுக் நேற்று வெளிவந்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. மூன்று வித பஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. அதில் ஹரிஷ், ரைசா இருவருக்கும் படத்தில் அதிகளவு காதல் இடம் பெற்றிருப்பது தெரிகிறது. இப்படத்தின் பற்றி யுவன் சங்கர் ராஜாவிடம் கேட்கும் போது" நல்ல கூட்டணியில் கதையை அமைத்து சிறப்பாக வெளிப்படுத்த விரைவில் வருவோம்" என கூறியுள்ளார்.
adsயுவன் சங்கர் ராஜா தயாரித்த காதல் படத்தில் பிக் பாஸ் பிரபலங்கள்
Related News
ads