சவரக்கத்தி படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய பிரபலம்

       பதிவு : Jan 23, 2018 12:55 IST    
savarakathi audio rights to yuvan savarakathi audio rights to yuvan

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'துப்பறிவாளன்'. இந்த படத்தில் நாயகனாக விஷால் நடிக்க இவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். மேலும் இப்படத்தினை தெலுங்கில் 'டிடக்டிவ்' என்ற தலைப்பில் வெளியிட்டனர். தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சம் மற்றும் வசூல் ரீதியிலும் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து மிஷ்கின் தற்பொழுது ஒரு புது படத்தில் நடித்து வருகிறார்.  

இயக்குனர் மிஷ்கின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘LONE WOLF புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவரே தயாரித்து நடித்து வரும் படம் 'சவரக்கத்தி'. இந்த படத்தில் இவருடன் இணைந்து இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். கடந்த நாட்களில் வெளியான இப்படத்தின் போஸ்டர், இரண்டு டீசர்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தங்கக்கத்தி எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு  படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.     

 

இந்த படத்தினை புதுமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கிவருகிறார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றி தற்பொழுது சவரகத்தி படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்திருப்பது குறிப்பிட தக்கது. மேலும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ‘KRIKES சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கடந்த நாட்களில் படக்குழு வெளியிட்டது. தற்பொழுது படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு சொந்தமான ‘U1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் கைப்பற்றி உள்ளார். இந்நிலையில் யுவனின் ‘U1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் தங்களது ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள படத்தின் ஆடியோவிற்கு ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பு கிடைத்து வருகிறது. வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளிவர உள்ள இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் சென்சார் குழுவினர் அளிக்கப்பட்டது குறிப்பிட தக்கது.            


சவரக்கத்தி படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய பிரபலம்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்