ads

தனது அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்

kamal haasan naalai namathe article

kamal haasan naalai namathe article

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21-ஆம் தேதி முதல்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தை அப்துல்கலாம் பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் இருந்து தொடங்கவுள்ளார். தற்போது தனது அரசியல் பயணத்திற்கு 'நாளை நமதே' என்று பெயர் சூட்டியுள்ளார். தனது அரசியல் பயணத்தின் முதல் கட்டமாய் தமிழகத்தில் உள்ள கிராமங்களை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து வார இதழ் கட்டுரையில் அவர் கூறியது "பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் மக்களை களத்தில் சந்திப்பதாக சொல்லியிருந்தேன். தற்போது இந்த பயணத்திற்கு 'நாளை நமதே' என்று பெயர் வைத்துள்ளோம்.

இதனால் எம்ஜிஆர் நினைவுகள் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல நினைவுகளாக இருக்க வேண்டும் என்று தான் அந்த பெயரை வைத்துள்ளோம். தன்னுடைய பல நற்பணி மன்றங்கள் செயல்படும் நற்பணிகள் என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.  எங்களது நற்பணி இயக்கம் ஏழைகளால் கட்டமைக்கப்பட்டவை. எங்களுக்கென்று தேவைகளும், பல கனவுகளும் உண்டு. அதை நோக்கிய பயணத்தில் அங்குமிங்கும் அலைந்து செய்துகொண்டிருந்ததை தற்போது நடுவில் நின்று செய்ய முனைந்துள்ளோம். நாங்கள் என்ன செய்ய உள்ளோம் என்பதை பார்ப்பதற்கு உதாரணமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம்.

இந்தியாவின் பலம் கிராமங்களில் தான் உள்ளது. தேவைக்காக கிராமங்களில் இருப்போர் நகரத்தை நோக்கி நகர்கின்றனர். இந்த தேவைகளை கிராமங்களில் உருவாக்கி தருவதால் அவர்கள் நகரங்களை நோக்கி நகரமாட்டார்கள். அதற்கான செயல்களை செய்வதற்காகத்தான் தற்போது விரைந்துள்ளோம். விரைவில் ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகம் நோக்கி பயணம் செய்யவுள்ள நான் அங்கு பேசப்போவதும் இதை பற்றித்தான். பிள்ளைகளை பல லட்சம் செலவு செய்து பல்வேறு பள்ளி கூடங்களில் நவீன வசதிக்காக சேர்க்கின்றனர். அதை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

இதற்கான விதைகளை ஏற்கனவே காமராசர் போன்றவர்கள் விதைத்து விட்டனர். அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். குடிநீர், சுத்தம், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை மக்களுக்கு அரசு செய்ய தவறியதை நாங்கள் செய்ய போகிறோம். முதலில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை வைத்து அடுத்தடுத்த கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம். 'நாளை நமதே' தத்தெடுக்கும் முதல் கிராமத்தை தேர்ந்தெடுக்கும் தேடலுக்கு சென்ற நம் குழுவினர் அனைத்து கிராமங்களுமே நம்முடைய முதல் தேடலில் இடம் பிடித்துள்ளது என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். கல்வியை மேம்படுத்த தற்போது வரை மடிக்கணினியும், காய் பேசியும் தான் மக்களிடம் அடைந்துள்ளது.

அறிவு மேம்படுத்த மடிக்கணினி மட்டும் போதும் என்பதை ஒரு போதும் ஒத்து கொள்ளமாட்டேன். எப்படி வாழ்வது என்று கற்றுத்தந்தால் தானே சுயமரியாதையுடன் வாழ முடியும். டிவிட்டரில் போட்டு போட்டு டிவிட் மழையே பெய்து விட்டேன். ஆனால் தோல் கணத்தில் உள்ள அவர்களுக்கோ அது உறைக்கவில்லை. அதனால் தான் களம்காண தயாராகிவிட்டேன். இதற்கான முயற்சி தான் இந்த 'நாளை நமதே'. கரம் காப்போம், தமிழகம் காப்போம், நாளை நிச்சயம் நமதே..! " என்று தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்