ads

கமல்ஹாசனின் அரசியல் மாநாட்டில் பங்கேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

Delhi Chief Minister Arvind Kejriwal to participate in Kamal Haasan first political conference at Madurai tomorrow

Delhi Chief Minister Arvind Kejriwal to participate in Kamal Haasan first political conference at Madurai tomorrow

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை நாளை ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள மறைந்த அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து துவங்கவுள்ளார். இங்கிருந்து தனது கட்சியின் பயணத்தை அறிவித்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மக்களை நேரடியாக சந்தித்து மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

தனது அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பாக திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் முத்தரசன் போன்ற மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் தனது நண்பர் மற்றும் அரசியல் போட்டியாளரான ரஜினிகாந்திடமும் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது டெல்லி முதல் மந்திரி மற்றும் ஆம்ஆத்மீ கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் நாளை நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது. முன்னதாகஅரவிந்த் கெஜ்ரிவால் சென்னைக்கு வந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து உரையாடியுள்ளார்.

அப்போது கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், நாட்டில் ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய காலம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மதுரையில் நடக்கும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் இன்று காலை நடிகர் கமல் ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனை அடுத்து நாளை அரசியல் தொடங்கவுள்ளது நம் நெடும் பயணம் என்று கமல் ஹாசன் அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

kamal haasan meet seeman today morningkamal haasan meet seeman today morning

கமல்ஹாசனின் அரசியல் மாநாட்டில் பங்கேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்