ads
திருவள்ளூர் அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்
வேலுசாமி (Author) Published Date : May 01, 2018 14:41 ISTPolitics News
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன், தற்போது சினிமா அரசியல் என துறைகளிலும் தற்போது ஈடுபட்டு வருகிறார். கமல் ஹாசன் அரசியலில் புது கட்சியை தொடங்கி தலைவராக பொருட்பெற்ற பிறகு தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களில் தனது கருத்தினை வெளிப்படுத்தினர். இதன் பிறகு தற்போது 'MAIAM WHISTLE' என்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த செயலியை கொண்டு பொது மக்கள் தவறு நடப்பதை புகைப்படம் எடுத்து அதனை பகிரும் வகையில் உருவாக்க பட்டுள்ளது. முன்னதாக கமல் ஹாசன் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள கிராமங்களை தத்தெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது திருவள்ளூரில் உள்ள அதிகத்தூர் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இன்று உழைப்பாளர் தினத்தில் அந்த இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்
"ஓட்டுக்காக கிராமங்களை தத்தெடுக்க வில்லை. வெற்றியை நிலை நாட்டவே நாங்கள் நினைக்கும் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் கிராமங்களையும் தத்தெடுக்க முடியாது. முதலில் 8 கிராமங்களை தத்தெடுக்கிறோம். பிறகு மக்களின் ஆதரவு எங்களுக்கு இருந்தால் நிச்சயம் 12 ஆயிரம் கிராமங்களையும் தத்தெடுக்க முடியும். தற்போது அகத்தியூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் மற்றும் 3 வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மழை நீரை சேமிக்கவும், தண்ணீரை வீணாவதை தடுக்கவும் வழிகள் ஏற்படுத்தி தரப்படும். மாணவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்புகளும், ஏரிகளை சீரமைக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. இது தவிர இன்னும் நிறைய பணிகள் செயல்படுத்த உள்ளோம். மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட மக்கள் நீதி மய்யம் பாடுபடும்" என அவர் தெரிவித்துள்ளார்.