ads

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு. Representation image of Kovai. Image credit-Sodabottle/Wikimedia

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு. Representation image of Kovai. Image credit-Sodabottle/Wikimedia

இன்று அதிகாலை கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யாதெனில், இன்று அதிகாலை 3:30 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். பேட்ரோல் குண்டு வீசும் காட்சி அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர் யார் என்று கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அந்த மர்மநபரின் விவரம் வெளியிடப்படும் என்று பொலிஸார் தங்களது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் பாஜக தமிழ்நாடு மாநில செயலாளர் திரு.எச்.ராஜா திரிபுராவில் விளாடிமிர் லெனினின் சிலை உடைக்கப்பட்டதை பெருமைப்படுத்தியும் அதேபோல் தமிழகத்தில் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்றும் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு சமூக ஆர்வலர்களிடமிருந்தும் திராவிட கழகங்களிடமிருந்தும் பெரும் எதிர்ப்புகள் வந்ததாலும் மேலும் ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றோரிடமிருந்தும் கடுமையான எச்சரிக்கைகள் வந்ததாலும் அந்த பதிவை நேற்று பிற்பகல் தன் முகப்புத்தகத்திலிருந்து நீக்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், தாலுகா அலுவலகம் முன்பு இருந்த பெரியார் சிலையின் மூக்கு மற்றும் மூக்குக்கண்ணாடி கற்களால் சிதைக்கப்பட்டது. சிலையை சிதைத்தவர் அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பதும் அவர் பாஜக-வின் உறுப்பினர் என்றும் தெரிந்ததால் சிபிஐ உறுப்பினர் பிரான்சிஸ் என்பவர் முத்துராமனை அடித்துள்ளார் பிறகு அது பெரும் கைகலப்பாகவே மாறியது. திருப்பத்தூர் பொலிஸார் முத்துராமனையும் பிரான்சிசையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தின் முக்கிய நகரமான கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை மீண்டும் எச்.ரோஜா நேற்று அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்ட செய்திக்கு மன்னிப்பு கோறியதோடு அல்லாமல் அதை தான் பதிவேற்றவில்லை என்றும் அதை பதிவேற்றியவர் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் எனவும் அவரது விசுவாசி ஒருவர்மீது பழி சாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எச்.ராஜாவின் கருத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மதுரை போன்ற இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டததால் போராட்டம் போர்க்களமானது.

அமைதிப்பூங்காவான தமிழகம், ஒரு முகப்புத்தகப் பதிவின் காரணமாக போர்க்களமாக மாறப்போகிறதா? ராஜாவின் உள்நோக்கம் நிறைவேறியதா?     

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு