ads

தமிழகத்தில் என்ன செய்ய விரும்புகிறார் எச்.ராஜா

 தமிழகத்தில் என்ன செய்ய விரும்புகிறார் எச்.ராஜா

தமிழகத்தில் என்ன செய்ய விரும்புகிறார் எச்.ராஜா

வடக்கில் எரிந்துகொண்டிருக்கும் தீயை தமிழகத்தில் எதிர்பார்க்கிறாரா எச். ராஜா?

திரிபுராவில் இருபத்தைந்து ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை கைப்பற்றிய பாஜக தன் வெற்றிக்களியாட்டத்தின் ஒரு பகுதியாக தெற்கு திரிபுராவிலுள்ள விளாடிமிர் லெனினின் சிலையை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது. 

அதன் தொடர்ச்சியாக இன்று காலை, தமிழக பாஜக-வின் செயலாளரான திரு.எச்.ராஜா அவர்கள் தனது முகப்புத்தகத்தில் லெனினிற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யுனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, இன்று திரிபுராவில் லெனினின் சிலை உடைக்கப்பட்டது நாளை தமிழகத்தில் "சாதி வெறியர் ஈவேரா" பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டிருந்தார்.

ஒரு தேசியக்கட்சியின் மாநில செயலாளர் இப்படி ஒரு கருத்தை பகிர்ந்திருப்பது பெரும் அதிருப்தியை மட்டும் அல்லாமல் தமிழ் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிடம் ஓங்கிய தமிழகத்தில், திராவிடத்தை பின்பற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எச்.ராஜாவின் கருத்திற்கு கடும் கண்டனத்தை வீசினார்கள் இதனால் எச்.ராஜா அவரது பதிவை அவரது முகப்புத்தகத்தில் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

 இந்த ஒருமுறைதான் எச்.ராஜா வன்மம் நிறைந்த கருத்துகளை பதிவிட்டாரா என்றால், இல்லை, இதற்க்கு முன்னரும் செய்திருக்கிறார் அனால் அது பெரும்பாலும் அரசியல் கட்சிகளையே சார்ந்திருந்தது அனால் தற்போது அவர் கூறிய கருத்து பெரியாரை குருவாக நினைக்கும் எண்ணற்ற தமிழர்களை கொச்சை படுத்தியதாகவே கருதப்படுகிறது.

ஏன் இவ்வாறு கூற வேண்டும்? அதன் உள்நோக்கம்தான் என்ன? பாபர் மசூதி சிதைப்பன்று வடக்கில் ஏற்பட்ட கலவரம் போன்று ஒரு கலவரத்தை தமிழகத்தில் எதிர்பார்த்தாரா எச்.ராஜா? பாஜக என்ற ஒரே கட்சியில் இரு வேறு கருத்துகள் நிலவுவது ஏன்? 

உலக நாடுகளை இந்தியாவோடு நண்பர்களாக மாற்றிக்கொள்ள அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பாஜக-வின் முக்கிய தலைவரும் இந்தியாவின் பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள். அதே கட்சியை சேர்ந்த ராஜா ஒரு சிலை இடிப்பை பெருமையாக கருதி பேசுவதும் தமிழகத்திலும் அது போன்ற ஒரு சூழல் உருவாகும் என்று கூறுவதும் எந்த ஒரு விதத்திலும் ஒத்துபோகவில்லையே.

இந்திய ஒற்றுமை என்பது ஒரே மதத்திற்குள்ளும் ஒரே அரசியல் கட்சிக்குள்ளும்  இருக்கவேண்டும் என்று எண்ணம் கொள்வது பல மதங்களையும் அதன் சடங்குகளையும் பல உலகக் கருத்துகளையும்  தீர்க்கமாக உள்வாங்கிக்கொண்டுள்ள இந்தியாவிற்கு பொருந்தாது. அது தெரிந்தும் இது போன்ற கருத்துகளை பதிவிடுவது ஒருமைப்பாட்டை பிளவுபடுத்தும் நோக்கத்திலா? 

பாஜக-வின்  கொள்கைகள்தான் என்ன? மக்களின் நலனா  இல்லை ஆட்சியை கைப்பற்றுவதா இல்லை உலகம் போற்றும் ஞாபக சின்னங்களை அழிப்பதா இல்லை இந்திய ஒருமைப்பாட்டுக்கு காவி வர்ணம் பூசுவதா?

கடவுள்கள் எதற்கு, மக்களின் ஒருமைப்பாட்டை போற்றுவோம் என்ற கருத்தை முன்னிறுத்தியவர் ஈவேரா அவர்கள் அதனாலேயே அவரை பெரியார் என்று அழைத்தனர். ஒருமைப்பாட்டை பற்றி யார்பேசினாலும் பாஜக-வினர் அவர்களை ஒழித்துக்கட்டுவோம் என்று மறைமுகமாக குறிப்பிடுகிறாரா ராஜா?  தமிழகம் அதற்க்கான இடமில்லை ராஜா அவர்களே.

தமிழகத்தில் என்ன செய்ய விரும்புகிறார் எச்.ராஜா