ads

வங்கதேசம் இலங்கை வீரர்கள் மைதானத்தில் மோதல் ட்ரெஸ்ஸிங் ரூமில் கண்ணாடி உடைப்பு

பங்களாதேஷ் ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு.

பங்களாதேஷ் ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு.

நிதாஹஸ் முத்தரப்பு T20 போட்டி தற்போது இந்தியா, இலங்கை மற்றும் வங்க தேச அணிகளுக்கிடையே நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்திருந்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, மஹமதுல்லாவின் சிறப்பான ஆட்டத்தில் இலங்கை அணியை தோற்கடித்தது.

இந்த போட்டியில் அதிகபட்சமாக தமீம் இஃபால் 42 பந்துகளில் 50 ரன்களும், மஹமதுல்லா 18 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக குஷால் பெரேரா 40 பந்துகளில் 61 ரன்களை எடுத்தார். இந்த போட்டியில் இலங்கை அணி வீசிய கடைசி ஓவரில் இலங்கை வீரருக்கும், வங்கதேச வீரருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த கடைசி ஓவரை உதானா வீசியுள்ளார். இவர் முதல் இரண்டு பந்துகளை பவுன்சராக வீச, நடுவர் நோ பால் கொடுக்காததால் நடுவரிடம் நோ பால் கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது தண்ணீர் பாட்டில் கொண்டு வந்த மாற்று வீரரான நூருல் ஹாசன் இலங்கை கேப்டன் குஷால் பெரேராவிடம் கோபமாக பேசியுள்ளார். பிறகு இலங்கை வீரர் ஒருவர் அவரை தள்ள, இது மோதலாக மாறியுள்ளது.

பின்னர் பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே வந்து ஆட வேண்டாம் என்று வீரர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கடைசி ஓவரில் நான்காவது பந்தை மஹமதுல்லா சிக்ஸராக அடித்து அணியை வெற்றிபெற செய்தார். வெற்றி பெற்ற பிறகு பங்களாதேஷ் வீரர்கள் மைதானத்திற்கு வந்து பாம்பு நடனம் ஆடியுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையில் நடந்த மோதலால் ரசிகர்கள் அதிர்ச்சி  அடைந்தனர். இதனை அடுத்து பங்களாதேஷ் ட்ரெஸ்ஸிங் ரூமில் கண்ணாடிகளை அங்கிருந்த வீரர்கள் உடைத்துள்ளனர். இது கேமிராவில் பதிவாகியுள்ளது. இதன் பிறகு கண்ணாடியை உடைத்து யார் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இதன் இழப்பீடை சரி செய்வதாக தெரிவித்துள்ளது. இந்த மோதல் காரணமாக இரு அணிகளின் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கை வங்கதேச வீரர்கள்.மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கை வங்கதேச வீரர்கள்.

வங்கதேசம் இலங்கை வீரர்கள் மைதானத்தில் மோதல் ட்ரெஸ்ஸிங் ரூமில் கண்ணாடி உடைப்பு