ads

சென்னை அணிக்கு திரும்பியது சொந்த மண்ணுக்கு திரும்பியது போல் உள்ளது - ப்ராவோ

சென்னை அணியின் வீரர்கள் துவக்க விழா இன்று நடைபெற்றுள்ளது. இதில் ப்ராவோ கலந்து கொண்டு பேசியுள்ளார்.

சென்னை அணியின் வீரர்கள் துவக்க விழா இன்று நடைபெற்றுள்ளது. இதில் ப்ராவோ கலந்து கொண்டு பேசியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 11வது ஐபிஎல் நடக்கவுள்ளது. 20 ஓவர் கொண்ட இந்த T20 போட்டியானது வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் மே மாதம் 27-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளது. கடந்த 2015-இல் நடைபெற்ற ஐபிஎல்லில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் இரண்டு ஆண்டுகள் விளையாட முடியாமல் போனது.

இதனால் கடந்த 2016-17 இல் நடைபெற்ற ஐபிஎல்லில் சென்னை அணி விளையாடாமல் போனதால் இரு ஐபிஎல்லில் ரசிகர்கள் வரவேற்பு குறைவாகவே இருந்தது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி ஐபிஎல்லில் களமிறங்கியுள்ளது. இந்த அணியில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடந்து முடிந்தது.

அதன்படி இந்த ஐபிஎல்லில் தோனி, ரெய்னா, முரளி விஜய், பிராவோ, டு பிளெஸ்ஸிஸ், ஜடேஜா அம்பதி ராயுடு, வாட்சன் உள்ளிட்ட 25 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் சென்னை அணியில் தொடர்ந்து விளையாடிய அஷ்வினால் இந்த ஆண்டு பங்கேற்க முடியாமல் போனது. இந்த ஆண்டு அஸ்வின் பஞ்சாப் அணிக்காக முதன் முறையாக ஒரு கேப்டனாக தோனியை எதிர்க்க உள்ளார்.

ஐபிஎல்லுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இன்று சென்னை அணியின் 'Yellow Army' துவக்க விழா இன்று நடைபெற்றுள்ளது. இதில் முரளி விஜய் மற்றும் ப்ராவோ ஆகியோர் கலந்து கொண்டு அறிமுகப்படுத்தினர். இதில் நிகழ்ச்சியில் பேசிய ப்ராவோ, 'இந்த ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடுவது சொந்த மண்ணில் விளையாடுவது போல் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

சென்னை அணிக்கு திரும்பியது சொந்த மண்ணுக்கு திரும்பியது போல் உள்ளது - ப்ராவோ