ads
இந்தியா தென் ஆப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி
வேலுசாமி (Author) Published Date : Jan 24, 2018 16:56 ISTSports News
இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒரு போட்டிகள், 3 T20 கிரிக்கெட்டில் விளையாட உள்ளது. இதில் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்துள்ளது.இதில் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டில் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த மூன்றாவது டெஸ்டில் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ரஹானேவும், பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக புவனேஷ் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் லோகேஷ் ராகுல் ரன் எடுக்காமல் பிலாந்தர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இவரை தொடர்ந்து முரளி விஜய்யும் 8 ரன்களில் ரபடா வீசிய பந்தில் அவுட் ஆனார்.
இதனால் ஆரம்பத்தில் தடுமாறிய இந்திய அணி பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றும் புஜாரா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வருகிறது. தற்போது விராட் கோஹ்லி 47 ரன்களுடனும், புஜாரா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். உணவு இடைவேளை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 36 ஓவரில் 83 ரன்களுக்கு 2 விக்கட்டை பறிகொடுத்துள்ளது.