ads

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று பழிதீர்த்த இந்தியா

 முத்தரப்பு T20 போட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா.

முத்தரப்பு T20 போட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா.

நித்தாஹஸ் முத்தரப்பு T20 போட்டி தற்போது இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம்  அணிகளுக்கிடையே இலங்கையின் தலைநகரான கொழும்புவில் நடந்து வருகிறது. மூன்று அணிகளும் தலா 1 என்ற கணக்கில் வென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது T20 போட்டி நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தியது. நேற்று நடந்த போட்டியில் இலங்கையை பழி தீர்க்குமா இந்தியா என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து பழி தீர்த்தது.

தற்போது 2 போட்டிகளை வென்று இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் 19 ஓவராக குறைக்கப்பட்டது.  முதலில் டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். பிறகு இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குணாதிலகா, குஷால் மெண்டிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் குணத்திலாகா மூன்றாவது ஓவரில் 17 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய குசல் பெரேராவும் வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடியாக விளையாடி குஷால் மெண்டிஸ் இலங்கை அணிக்கு ரன்களை குவித்து கொண்டிருந்தார். ஆனால் அவரும் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவர் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளை 37 பந்துகளில் அடித்து 55 ரன்களை எடுத்துள்ளார். இதன் பிறகு இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீச 19 ஓவரில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக ராகுல் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் களமிறங்கினர். இதில் ராகுல் 18 ரன்களிலும் ரெய்னா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு தினேஷ் கார்த்திக் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இந்த ஜோடி இறுதி வரை நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற செய்தனர். இதில் மனிஷ் பாண்டே 42 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 39 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று பழி தீர்த்தது.

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று பழிதீர்த்த இந்தியா