ads

கூகுளின் VR180 கிரியேட்டர் விர்ச்சிவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனம் VR180 விடீயோக்களை எடிட் செய்வதற்கு கூகுள் VR180 கிரியேட்டர் என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது

கூகுள் நிறுவனம் VR180 விடீயோக்களை எடிட் செய்வதற்கு கூகுள் VR180 கிரியேட்டர் என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது

VR விடீயோக்களை எடிட் செய்ய  கூகுளின் VR180 கிரியேட்டர் தொழில்நுட்பம். இணையதள முடிசூடா மன்னனான கூகுள் நிறுவனம் தற்போது VR (Virtual Reality) வீடியோ மற்றும் புகைப்படங்களை எடிட் செய்வதற்கு கூகுள் VR180 கிரியேட்டர் (VR180 Creator) என்ற டூலை அறிமுகம் செய்துள்ளது. VR எனப்படும் பார்ப்பதற்கு உண்மையானதாக காணப்படும் உயர்தர புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் தற்போதுள்ள பெரும்பாலான மக்களை கவர்ந்து வரும் நிலையில் அதற்கேற்றாற்போல் கூகுள் முன்னதாக VR180 என்ற கேமிராவை அறிமுகம் செய்தது.  

இந்த உயர்தர புகைப்படங்கள் விடீயோக்களை எடிட் செய்து வழக்கமான புகைப்படமாக மாற்றுவதற்கு இதர மென்பொருளை உபயோகித்து வந்தனர். இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் VR புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை எடிட் செய்ய VR180 கிரியேட்டர் என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது. VR கேமிராவை இந்த மென்பொருளில் கனக்ட் செய்து பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை எளிதாக எடிட் செய்யலாம்.

தற்போது இந்த VR180 கிரியேட்டர் Mac மற்றும் Linux இயங்கு தலங்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. இதன் பிறகு விண்டோஸ் தளத்திலும் விரைவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது அறிமுகபடுத்தப்பட்ட VR180 கிரியேட்டரை இன்ஸ்டால் செய்ய உங்கள் இயங்கு தளம் Mac OS 10.9+ மற்றும் 64Bit Linux போன்ற அம்சங்களை கொண்டிருக்க வேண்டும். தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பமான Virtual Reality, உலகம் முழுவதும் ஏராளமான மக்களை கவர்ந்து வருகிறது.

இந்த கேமிராவை கொண்டு படங்கள், விடியோக்கள் போன்றவற்ற காணும் போது, அந்த விடீயோவினுள் உள்ளே இருப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கும். இதற்காக சாம்சங், லினோவோ போன்ற நிறுவனங்கள் VR கேமிராக்களுடன் அதனை எடிட் செய்ய மென்பொருளும் வழங்கி வந்த நிலையில் கூகுள் நிறுவனமும் தனது VR180 கேமிராவில் பதிவு செய்யப்பட்ட விடீயோக்களை எடிட் செய்ய VR180 கிரியேட்டர் என்ற புதிய மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது.#VR180CreatorTool #VR180footage #GOOGLEARANDVR #VR180cameras #VR180

VR விடீயோக்களை எடிட் செய்யும் VR கிரியேட்டர் மேக் மற்றும் லினக்ஸ் இயங்கு தலத்தில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் விண்டோஸ் தளத்திலும் அறிமுகம் செய்ய உள்ளனர்.VR விடீயோக்களை எடிட் செய்யும் VR கிரியேட்டர் மேக் மற்றும் லினக்ஸ் இயங்கு தலத்தில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் விண்டோஸ் தளத்திலும் அறிமுகம் செய்ய உள்ளனர்.

கூகுளின் VR180 கிரியேட்டர் விர்ச்சிவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்