ads
வாட்சப்பின் குழுக்களுக்கு தேவையான புதிய தொகுதி அறிமுகம்
புருசோத்தமன் (Author) Published Date : Mar 18, 2018 21:33 ISTTechnology News
வாட்சப் அட்மின்களுக்கு மிக உதவியான ஒரு அம்சமாக பல்வேறு அப்டேட்களை கொடுத்த நிலையில், தற்போது வாட்சப் குரூப்பில் இருக்கும் அட்மின் தனது குரூப்பை பற்றிய முழு விவரத்தின் குறிப்பை (Group Description ) பதிவு செய்து கொள்ளலாம். புதிதாக யாரேனும் அந்த குரூப்பில் இணைக்கப்பட்டால், அவர்கள் அக்குழுவின் முழு விவரத்தை படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த அப்டேட் கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் 'iOS' மொபைல் உபயோகிப்போர் உபயோகபடுத்தலாம், விண்டோஸ் கணினி (Windows Computer) மற்றும் மேக் கணினியில் (Mac Computer) இந்த புதிய அப்டேட் இல்லை. இந்த புதிய அப்டேட்டை செயல்படுத்த கீழே குறிப்பிட்ட முறையை செய்யவும் 1. உங்கள் வாட்சப்பில் உள்ள குரூப்பில் நுழைந்தபின் " Group Info " அல்லது குரூப்பின் பெயரை தொடவும் 2. குரூப் புகைப்படத்திற்கு கீழ் உள்ள " Add group description " தொகுதியை தொடவும். 3. நீங்கள் " Add group description " டைப் செய்யதுக்கொள்ள இடம் காண்பிக்கப்படும், இங்கு உங்கள் குரூப்பை பற்றிய தேவையான தகவல்களை உள்ளிடலாம். 3. தமிழில் உங்களால் 510 எழுத்துக்களை மட்டுமே டைப் செய்து கொள்ளமுடியும், ஆங்கிலத்திலும் 510 எழுத்துக்களை மட்டுமே டைப் செய்துகொள்ள முடியும்.