ads
நீங்கள் இறந்த பின்னர் யார் உங்களுடைய பேஸ்புக் கணக்கை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டிர்களா
வேலுசாமி (Author) Published Date : May 15, 2018 10:48 ISTTechnology News
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பேஸ்புக் நிறுவனம். இந்நிறுவனத்தின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உலகம் முழுவதும் பல பில்லியன் மக்கள் கணக்குகளை வைத்து உபயோகப்படுத்தி வருகின்றனர். ஒரு மாதத்தில் பேஸ்புக் உபயோகப்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை 2.2 பில்லியன் ஆகும். பேஸ்புக் தற்போது பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து லாபத்தை ஈட்டி கொண்டிருக்கிறது.
இந்த சர்ச்சையால் பலர் பேஸ்புக் உபயோகப்படுத்துவதை தவிர்த்தாலும் பொழுதுபோக்குக்காக இன்னும் பில்லியன் பயனாளர்கள் உபயோகப்படுத்தி தான் வருகின்றனர். தன்னுடைய பயனாளர்களை கவரும் வகையில் பேஸ்புக் நிறுவனம் பல சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மட்டுமல்லாமல் இறந்தவர்களுக்கும் உதவியாக சிறப்பு அம்சங்களை வழங்கியுள்ளது. ஒருவர் இறந்துவிட்டால் தனது உறவினரோ அல்லது நண்பரோ அவருடைய பேஸ்புக் கணக்கை அவர் நினைவாக உபயோகப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான வழிமுறைகள் பின்வருமாறு,1. முதலில் உங்களுடைய பேஸ்புக் கணக்கை லாகின் (Login) செய்யவும். 2. பின்னர் More --> Settings பட்டனை க்ளிக் செய்யவும்.3. பிறகு இடது புறத்தில் உள்ள Menuவில் General --> Manage Account --> Edit என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 4. பிறகு உங்களுக்கு இரண்டு நண்பர்கள் அல்லது உறவினர்கள் சேர்ப்பது மற்றும் கணக்கை நீக்குவது போன்ற அம்சங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். இதில் விருப்பமான நண்பர்களை தேர்வு செய்து ADD என்ற பட்டனை க்ளிக் செய்தால் விருப்பமான நபர் தேர்வு செய்யப்படுவர்.5. தேர்வு செய்யப்பட்ட நண்பர் நீங்கள் தற்போது வரை பேஸ்புக் கணக்கில் உபயோகப்படுத்திய தகவல்கள், புகைப்படங்கள், விடியோக்கள் போன்றவற்றை காண வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கும் ஆப்சன் உள்ளது. இதற்கு 'Data Archive Permission' என்ற ஆப்ஷனில் உள்ள பட்டனை க்ளிக் செய்யவும்.6. இப்போது அவருக்கு 'உங்கள் கணக்கு 'Legacy Contact'இல் இணைக்கப்பட்டுள்ளதாக' ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கும். இப்படி உங்களுடைய பேஸ்புக் கணக்கை யார் உபயோகிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து அவர்களை உங்களுடைய கணக்கில் இணைத்து கொள்ளலாம். வேண்டாம் எவரும் எனது கணக்கை பார்க்க வேண்டாம் என்றாலும் உங்கள் கணக்கை நீக்கவும் முடியும்.