ads

மஞ்ச ஜெர்சில வீரமா உங்க காது கிழியிற விசிலுக்கு நடுவுல விளையாடுறத நனச்சாலே மெர்சலாவுது - ஹர்பஜன் சிங்

சென்னை அணிக்கு விளையாடுவது குறித்து பவுலர் ஹர்பஜன் சிங் தமிழில் மெர்சலாக ட்வீட் பதிவு செய்துள்ளார்.

சென்னை அணிக்கு விளையாடுவது குறித்து பவுலர் ஹர்பஜன் சிங் தமிழில் மெர்சலாக ட்வீட் பதிவு செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், வரும் 11வது ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக முதன் முறையாக களமிறங்கவுள்ளார். இவர் முன்னதாக சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியவர். இவரை சென்னை அணி முன்னதாக நடைபெற்ற ஏலத்தில் 2 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

பஞ்சாபை சேர்ந்த இவருக்கு தமிழ் மிகவும் பிடித்தமான மொழி. இவர் அவ்வப்போது தனது டிவிட்டரில் தமிழில் தனது கருத்துக்களை பதிவு செய்வார். வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி ஐபிஎல் T20 போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழ் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மும்பை அணிக்காக விளையாடிய இவரை மஞ்சள் நிறத்தில் சென்னை அணிக்காக விளையாடுவதை பார்க்கவுள்ளோம்.

இதற்காக அவரும் மிகவும் ஆர்வமாக உள்ளார். இது குறித்து அவர் தற்போது தனது டிவிட்டரில் "நான் வந்துட்டேன்னு சொல்லு... தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல சென்னை ஐபிஎல்லுக்காக விளையாட போறத நெனச்சாலே "மெர்சலாகுது"..தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!" என்று அவர் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் மஞ்ச ஜெர்சியில் இவர், ப்ராவோ மற்றும் ஜடேஜா போன்ற வீரர்கள் நடனமாடும் விடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது 

மஞ்ச ஜெர்சில வீரமா உங்க காது கிழியிற விசிலுக்கு நடுவுல விளையாடுறத நனச்சாலே மெர்சலாவுது - ஹர்பஜன் சிங்