ads

பள்ளிக்கூடத்திற்கு செல்ல மறுத்த குழந்தையை கயிற்றில் கட்டி அழைத்து சென்ற தந்தை கைது

பள்ளிக்கூடத்திற்கு செல்ல மறுத்த குழந்தையை கயிற்றில் கட்டி அழைத்து சென்ற தந்தை கைது

பள்ளிக்கூடத்திற்கு செல்ல மறுத்த குழந்தையை கயிற்றில் கட்டி அழைத்து சென்ற தந்தை கைது

தற்போதுள்ள பெற்றோர்களுக்கு பெரும்பாலும் தங்களது குழந்தைகளின் மீது பாசம் குறைவதற்கு 'அடம்பிடித்தல்' என்ற குணம் காரணமாகிவிடுகிறது. அது அவர்களுடைய குழந்தை பருவத்தில் இருக்க கூடிய ஒரு குணம். சந்தையில் ஒரு பொருள் வேண்டுமென்று அடம்பிடிப்பது, மற்ற குழந்தைகளை பார்த்து எனக்கும் அது வேண்டுமென்பது, பள்ளி கூடத்திற்கு செல்ல அடைப்பிடிப்பது போன்ற ஏராளமான செயல்கள் தற்போதுள்ள குழந்தைகளிடம் அதிகப்படியாக இருந்து வருகிறது.

இதில் பெரும்பாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள், அவர்களுடன் ஒவ்வொரு நாளும் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. பள்ளிக்கூடம் என்றாலே குழந்தைகள் வெறுப்பதற்கு பள்ளிக்கூடத்தின் நடைமுறைகளும், ஆசிரியர்களும் ஒரு காரணம். பள்ளி கூடத்தில் குழந்தைகள் வரிசையில் செல்வது, வரிசையில் அமருவது, படிப்பு திறமையை பொறுத்து பாகுபாடு பார்ப்பது, படிக்காவிட்டால் அடிப்பது, திட்டுவது, பெல் அடித்தால் சாப்பாடு போன்ற ஒரு ஜெயில் வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகின்றனர். இதனால் தான் பள்ளிக்கூடத்திற்கு போக அடம்பிடிக்கின்றனர்.

இந்த பருவத்தில் அதிகப்படியான விளையாட்டும், கொஞ்சம் படிப்பும் மட்டுமே இருந்தால் போதுமானது. இதில் விளையாட்டை நீக்கி விட்டு படி படி என்று வற்புறுத்தினால் கல்வி அவர்களிடம் அரைகுறையாக தான் வளரும். 'வராத படிப்பை வா வா னா எப்படி வரும்' என்பது போல தான். ஆனால் படிப்பை குழந்தைகளுக்கு படிப்படியாக கற்பிக்க வேண்டும். சிறு வயதில் பெற்றோர்களின் ஊக்கமும், அறிவுரைகளும் குழந்தைகளை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். அதை விட்டு அவர்களை அடித்தாலும், மிரட்டினாலும் அது தலைகீழாக தான் முடியும். இதோ இதற்கான சான்று..

சீனாவில் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கும் குழந்தையை, பெற்றோர் கயிற்றை போட்டு கட்டி வண்டியில் அழைத்து சென்று பள்ளிக்கு விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்த சீன காவல் துறையினர் அந்த குழந்தையின் பெற்றோரை கைது செய்துள்ளனர். விசாரித்ததில் பெற்றோர் கூறியதாவது "என் மகளை ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு அனுப்புவதற்கு மகளுடன் போராட வேண்டியுள்ளது. அவர் மறுத்தாலும் கட்டாயப்படுத்தி பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றால் தான் உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்தை அடைய முடியும். இது போன்று அடம்பிடிக்கும் போது தான் என் மகளை கயிற்றில் கட்டி பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றேன்." என அந்த பெற்றோர் தெரிவித்துள்ளார். 

பள்ளிக்கூடத்திற்கு செல்ல மறுத்த குழந்தையை கயிற்றில் கட்டி அழைத்து சென்ற தந்தை கைது