ads

காற்றில் கந்தக -டை-ஆக்சைடு கலப்பதில் இந்தியா தற்போது முதலிடம்

sulfur dioxide air pollution

sulfur dioxide air pollution

1952-ஆம் ஆண்டு லண்டனில் காற்றில் கந்தக-டை-ஆக்சைடு கலந்ததினால் காற்று மாசடைந்து அதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது அமெரிக்காவிலுள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழகம் காற்று மாசுபாடு சம்பந்தமாக மேற்கொண்ட ஆய்வில் காற்றில் கந்தக-டை-ஆக்சைடு கலப்பதில் இந்தியா முதலிடம் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

சுற்றுசூழல் சுகாதாரத்திற்கும் மனிதகுலத்திற்கு பெரும் கேடு விளைவிக்க கூடிய இந்த கந்தக-டாய்-ஆக்சைடு காரணமாக இந்தியாவில் 3 கோடியே 30 லட்சம் மக்களும் சீனாவில் 9 கோடியே 90 லட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மேரிலேண்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவந்துள்ளது. இந்த கந்தக-டை-ஆக்சைடு காற்றில் கலப்பதினால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் மக்களின் ஆயுட்காலம் குறைவதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு கந்தக-டை-ஆக்சைடு வெளியேற்றுவதில் இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளியது. 

தற்போது முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் வகிக்கிறது. மேலும் கந்தக-டை-ஆக்சைடு வெளியேற்றுவதில் முதலிடத்தில் இருந்த சீனா 70 சதவீதம் அளவிற்கு குறைத்துள்ளது. அதே சமயம் இந்தியாவில் 50 சதவீதம் உயர்த்தி தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் நிலக்கரி உபயோகத்தில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. நிலக்கரியின் அளவில் 3 சதவீதம் கந்தகம் உள்ளதால் அதை அதிகம் உபயோகிப்பதால் காற்று மாசுபாடு பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காற்றில் கந்தக -டை-ஆக்சைடு கலப்பதில் இந்தியா தற்போது முதலிடம்