மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது ஜியோ போன்

jio sale started again

முகேஷ் அம்பானியின் ஜியோ போன் விற்பனை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே விற்று தீர்த்தது. தற்பொழுது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த ஜியோ போனை வாங்குவதற்கான இணைப்பை குறுஞ்செய்திகளாக அனுப்புகின்றனர். இந்த செய்தியில் மூலம் வரும் கோட் (Code) காட்டி அருகிலுள்ள ஜியோ அலுவலகத்தில் இந்த மொபைலை வாங்கலாம். முன்பு விற்பனைக்கு வந்த ஜியோ போன் 6 மில்லியன் மொபைலை விற்றது. அடுத்த கட்டமாக தற்போது விற்பனைக்கு வந்துள்ள ஜியோ போன் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை இலக்காக வைத்துள்ளது. இந்த மொபைலின் விலை 1500 ரூபாய் மட்டுமே. இந்த மொபைலை வாங்க முன்பதிவு செய்பவர்கள் 500 ரூபாய் கட்டி முன்பதிவு செய்ய வேண்டும். விநியோகத்தின் போது மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும். இந்த மொபைலை மூன்று ஆண்டுக்குள் திருப்பி தரும் வாடிக்கையாளர்களுக்கு 1500 ரூபாய திருப்பி தரப்படும். இந்த சலுகையில் சில மாதங்களுக்கு முன்னர் மாற்றம் செய்துள்ளது. அதன் படி முதல் வருடத்திற்குள் திருப்பி தரும் வாடிக்கையாளருக்கு எந்த சலுகையும் கிடைக்காது. 12 முதல் 24 மாதங்களில் திருப்பி தரும் வாடிக்கையாளர்களுக்கு 500 ருபாய் திருப்பி தரப்படும். மேலும் 24 முதல் 36 மாதங்களில் திருப்பி தரும் வாடிக்கையாளருக்கு 1000 ரூபாய் திருப்பி தரப்படும். முன்பு அறிவிக்கப்பட்ட திட்டப்படி 36 மாதங்கள் முடிந்த பிறகு திருப்பி தரும் வாடிக்கையாளருக்கு 1500 ரூபாயை திரும்ப தரப்படும். வாடிக்கையாளரின் குறைந்த பட்ச பயன்பாட்டிற்கு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள்  தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத பதுக்கலைத் தடுக்கவும்,  ஜியோவின் மிகச் சிறந்த வசதிகளைப் பயனாளர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்யவும் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு 1500 வரை ரீசார்ஜ் செய்ய வேண்டும். உதாரணமாக பயனாளர்கள் ஜியோ திட்டங்களில்  உள்ள 153 ரூபாய் என்ற மாதாந்திர  திட்டத்தை தேர்வு செய்து 10 முறை இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் போதும் அவர் வருட இறுதியில் திரும்ப செலுத்த விரும்பினால் திரும்ப பெரும் கட்டணத்தை பெறுவதற்கு பொருத்தமாக இருக்கிறார். மேலும் ஜியோவின் தடையற சேவையை வழங்கும் பொருட்டு நாடு முழுவதும் 12000 சேவை மையங்கள் இயங்கிவருகிறது


மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது ஜியோ போன்


  Tags : 
 • jio mobile
 • reliance jio phone
 • reliance jio new announcement
 • Mukesh Ambani
 • reliance jio sell
 • jio phone started again for sell
 • 4G VoLTE feature phone
 • reliance jio booking
 • reliance jio pre booking
 • jio phone offers
 • jio offers
 • jio mobile available stores list
 • jio phone price details
 • jio phone tamilnadu
 • jio phone recharge details
 • jio phone refund
 • how to return jio phone
 • jio phone booking status
 • jio phone tariff
 • how to buy jio phone
 • how to cancel jio phone pre booking
 • jio phone terms and conditions
 • jio 153 plan validity
 • reliance jio refund
 • jio phone cancellation
 • jio phone return condition
 • cancel jio phone booking
 • ஜியோ போன்
 • ஜியோ போன் இலவசம்
 • ஜியோ போன் முன்பதிவு
 • ஜியோ போன் எப்போது கிடைக்கும்
 • ஜியோ போன் டெலிவரி தேதி
 • ஜியோ போன் வசதிகள்
 • jio phone 4g
 • jio phone online booking
 • jio mobile phone booking
 • jio phone 1500 rs
 • jio phone price
 • jio phone features
 • jio phone specification
 • jio mobile phone price