ads

நடிகர் விக்ரமின் 'சாமி ஸ்கொயர்' புது ஸ்டில்ஸ்

saamy square new stills

saamy square new stills

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2003-இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'சாமி'. இந்த படம்  விக்ரமின் நடிப்பு, வசனம் போன்றவை ரசிகர்களிடம் தற்போது வரை பேசும் படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து படக்குழு 'சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் 'சாமி' படத்தின் தொடர்ச்சியாக உருவாகாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, ஓஏகே சுந்தர், வேலுமணி, பிரபு, தியாகு, பாலா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையாக கதாபத்திரத்தில் நடித்த கோட்டா சீனிவாசன் இறந்து விடுவார். இந்த படத்தின் தொடர்ச்சியாக 'சாமி 2' தயாராகிறது. இந்த படத்தில் பெருமாள் பிச்சைக்கு மகன்களாக  பாபிசிம்ஹா, ஓ.ஏ.கே.சுந்தர், பாலாசிங் ஆகியோர் நடிக்கின்றனர். பெருமாள் பிச்சையை கொன்றதற்காக விக்ரமை பழிவாங்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் அவரின் நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெறுவது, பெருமாள் பிச்சையின் வெண்கல சிலையை திறப்பது, சிலையை திறக்கும் போது மக்கள் அதை தடுப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். 

saamy square new stillssaamy square new stills
saamy square new stillssaamy square new stills
saamy square new stillssaamy square new stills
saamy square new stillssaamy square new stills
saamy square new stillssaamy square new stills

நடிகர் விக்ரமின் 'சாமி ஸ்கொயர்' புது ஸ்டில்ஸ்