ads

மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் சீயான் விக்ரம்

vikram in malayala movie

vikram in malayala movie

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதாபத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனியொரு அங்கீகாரத்தை பிடித்தவர் விக்ரம். இவர் படம் என்றாலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் சீயான் விக்ரம் தற்போது  ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம் மற்றும் சாமி ஸ்கொயர் போன்ற படங்களுக்கு ஆர்வம் காட்டி வருகிறார். இதில் விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. 

இதனை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்திலும், இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' படத்திலும் நடித்து வருகிறார். 'சாமி ஸ்கொயர்' படத்தை தமின்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமின்ஸ் தயாரிக்கிறார். சிபு தமின்ஸ் தயாரிப்பில் தற்போது மலையாளத்தில் உருவாகிவரும் படம் 'ரோஜாப்பூ'. இந்த படத்தை வினு ஜோசப் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை அஞ்சலி, பிஜு மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் சீயான் விக்ரம்