ads

'ஸ்கெட்ச்' படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

'ஸ்கெட்ச்' படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

'ஸ்கெட்ச்' படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் 'ஸ்கெட்ச்'. இந்த படத்தை மூவி பிரேம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். எஸ்.எஸ்.தாமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீ பிரியங்கா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.  இந்த படத்தின்   இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.

ஸ்கெட்ச் படத்தினை தொடர்ந்து தற்போது 'துருவநட்சத்திரம்' மற்றும் 'சாமி -2' படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். 'ஸ்கெட்ச்' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படம் பொங்கலுக்கு ஜனவரி 23-இல் வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

'ஸ்கெட்ச்' படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

'ஸ்கெட்ச்' படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு