ads

மீண்டும் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை - ஏர் டெக்கானின் அறிமுக சலுகை

air deccan new offer

air deccan new offer

ஏர் டெக்கன் நிறுவனம் 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-இல் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை முன்னாள் ராணுவ கேப்டன் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஜிஆர் கோபிநாத் ஆகியோர் தொடங்கினர். பல்வேறு காரணங்களால் நஷ்டத்தை சந்தித்த இந்நிறுவனம், 2008-ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகளை கிங் பிஷர் நிறுவனம் வாங்கியது. இதனால் ஏர் டெக்கன் நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டு 2012-ஆம் ஆண்டு நிரந்தரமாக நிறுத்திவைக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ஏர் டெக்கன் நிறுவனம் தற்போது மீண்டும் செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது மீண்டும் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் முதலில் பயணம் செய்யும் ஒரு சில அதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு எதிர்கால திட்டங்கள் இருப்பதாகவும் ஏர் டெக்கன் தெரிவித்துள்ளது.

மீண்டும் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை - ஏர் டெக்கானின் அறிமுக சலுகை