ads
நாம் அன்றாடம் செய்யும் செயலின் நன்மையும் தீமையும்
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 26, 2017 11:49 ISTHealth News
மனிதனுடைய தற்போதைய வாழ்வில் சில பழக்கங்கள் நம்மோடு தொடர்ந்து வருகிறது. ஆனால் இந்த வகையான செயல்களால் வரும் நன்மைகளையும் தீமைகளையும் அறியாமல் அந்த செயல்களை செய்வோம். அதை பற்றி பார்ப்போம்.
பகலில் உறக்கம் : சில சமயங்களில் மிகுந்த களைப்பின் காரணமாக ஒரு குட்டி தூக்கம் போடுவோம். இது கெட்ட பழக்கமாக இருந்தாலும், இதனால் உடம்பில் சோர்வு நீங்கி தெம்பு கிடைப்பதோடு மனமும் தெளிவடையும்.
டீ, காபி : நம்மில் பலருக்கும் காலை எழுந்தவுடன் சூடான காபி அல்லது டீ பருகுவது மிகவும் பிடித்த விஷயம். அதிகமாக காபி பருகுவது நிச்சயம் கெடுதல் தான். ஆனால் அளவோடு காபி பருகினால் நீரிழிவு, அல்சர், கல்லீரல் புற்று நோய் போன்றவற்றின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பயமும் பதற்றமும் : பயமும் பதற்றமும் மனிதனின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது. ஆனால் இந்த உணர்வுகள் வலிநிவாரணியாக செயல்படுவதாக மருத்துவர் ரிச்சர்ட் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
பகலில் கனவு : நம் வாழ்க்கையில் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்...அப்படி நடந்தால் எப்படி இருக்கும்.. என்று பகலில் கனவு காணும் பழக்கம் நம்மில் இருக்கிறது. இதனால் காலத்தை போக்கும் வீணான செயல் என்று தெரிவித்தாலும், பகல் கனவால் கற்பனைத்திறனும் மூளையின் சுறுசுறுப்பு கூடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவிங்கம் மெல்லுதல் : சுவிங்கம் மெல்லுதல் பொது இடங்களில் நிச்சயம் நல்ல பேர் தராது. இது ஒரு கெட்ட செயல் என்று கருதப்பட்டாலும் சுவிங்கம் மெல்லுவதால் மூளையின் செயல்பாடும், உடலின் சக்தியும் அதிகரித்து மன அழுத்தம் குறைவதாக மருத்துவர் கின் யா குபோ தெரிவித்துள்ளார்.
வீடியோ கேம் : தற்போது உள்ள சூழ்நிலையில் குழந்தைகள் செல்போன் இல்லாமல் இருப்பதில்லை. அவர்களுக்கு சாப்பாட்டை விட வீடியோ கேம் விளையாடுவது மிகவும் பிடித்த விஷயம். ஆனால் இதை பெற்றோர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீடியோ கேம் விளையாட மருத்துவர்கள் அனுமதிக்கிறார்கள். இதன் மூலம் கண் மற்றும் கைகளுக்கிடையே ஓர் இணைப்பு உருவாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.