ads
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு
வேலுசாமி (Author) Published Date : Apr 05, 2018 10:39 ISTஇந்தியா
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல நாட்களாக தமிழகத்தில் ஏராளமான பொது மக்கள் முதல் அரசியல் காட்சிகள் வரை மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விடுத்த கால கேடு முடிந்துவிட்ட நிலையில் மத்திய அரச இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் மத்திய அரசை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை 9-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த போராட்டங்களில் திமுக 5 நாட்களாக போராடி வருகிறது. தற்போது திமுக தனது தோழமை கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
திமுகவின் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றது. சென்னையில் பல இடங்களில் சாலைகளை மறித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணாசாலையில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் இணைந்து பிரமாண்ட பேரணியாக மெரீனாவை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றிற்காக போராட்டக்களமாக காணப்படுகிறது. ஆனால் இந்த போராட்டங்கள் நீண்ட நாட்களாக நடைபெற்றும் மத்திய அரசு சற்றும் கவனிக்காதது வேதனையாக உள்ளது.