ads
அமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி வரி குறைப்பு திட்டம்
விக்னேஷ் (Author) Published Date : Nov 16, 2017 10:30 ISTஇந்தியா
அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடைபெற்ற 23-வது ஜி.எஸ்.டி கவுன்சிலின் கூட்டத்தில் 213 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பது குறித்து பேசப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லீ தலைமை தாங்கினார். இந்த ஜி.எஸ்.டி வரி குறைப்பு திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஹோட்டல்களுக்கு முந்தய ஜி.எஸ்.டி வரி 12 சதவீதமாக இருந்தது. தற்போது 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் அடிப்படை தேவையான 178 பொருட்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து உணவகங்களிலும் சீராக 5 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்,டி வரி குறைப்பினால் வயர், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நீரிழிவு நோயாளிகளின் உணவு, மருத்துவ ஆக்சிஜன், மூக்கு கண்ணாடி, தொப்பி, பர்னிச்சர், மெத்தை, சூட்கேஸ், சலவைத்தூள், ஷாம்பு, மின்விசிறிகள், விளக்கு, ரப்பர் டியூப், உருளைக்கிழங்கு பவுடர் உட்பட 213 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைந்துள்ளது.