ads
ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 30, 2017 21:28 ISTஇந்தியா
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனை அவரது மறைவிற்கு பிறகு பொதுமக்களின் பார்வைக்கு நினைவிடமாக மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை அடுத்து போயஸ் கார்டனை அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றும் பணியை தொடங்கினர். இந்நிலையில் போயஸ் கார்டனை முழுக்க அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து நினைவிடமாக மாற்றும் பணிகள் இன்று அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இன்று காலை இதற்காக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொது பணி துறை அதிகாரிகள் தற்போது போயஸ் கார்டனை தீவிரமாக கண்காணித்து வீட்டை அளக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று கூடுதலாக போயஸ் கார்டன் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் கார்டனை நினைவிடமாக மாற்றும் பணியை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.