ads

ஒக்கி புயல் மீட்பு பணியை குறித்து தமிழக அரசு மனு தாக்கல்

fisherman missing case in madurai high court

fisherman missing case in madurai high court

ஒக்கி புயல் காரணத்தினால் கன்னியாகுமரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த மீனவர்களும் பாதிப்பிற்கு உள்ளாகிவருகின்றனர். இந்த புயல் காரணத்தினால் கடலுக்கு சென்ற மீனவர்களில் 551 பேரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அவர்களை விரைவில் மீட்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பதிவு இன்று மதுரை கிளை உயர்நிதி மன்றத்திற்கு வந்தது. மனு தாக்களுக்கான விசாரணை நடைபெறும் போது அரசு தரப்பில் இருந்து ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டனர். அதில் நேற்று முதல் 47 மீனவர்களை மீட்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் 271 மீனவர்களை மீட்பதற்கான தீவிர மீட்பு பணி நடைபெற்று இருப்பதாகவும் மனு தாக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.      

மேலும் மீதமுள்ள 271 மீனவர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவதாகவும், குறிப்பாக கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாகவே அனைத்து மீனவர்களையும் மீட்டு விடலாம் என்று அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட கருத்துக்கள்.  

இதற்கு மனு தாக்கல் செய்தர்வர்களின் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை தொடந்து தமிழக அரசு மீனவர்களை தேடும் பணியை தாமதமாக ஈடுபட்டு வருவதாகவும், மீனவர்களை மீட்பதற்கு மற்ற மீனவர்கள் தேடுதல் பணியில் இறங்கியிருப்பதாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர், மீனவர்களை மீட்பதற்கு எத்தனை கப்பல் கடலுக்குள் அனுப்பட்டிருக்கிறது, மீனவர்களை மீட்பதற்கு எந்த எந்த முயற்சிகள் நடைபெற்றிருக்கிறது என்று கேட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பினர் இது குறித்த விரிவான தகவலுக்கு கால அவகாசம் கேட்டுள்ளது. இதை அடுத்து வழக்கின் விசாரணையும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.         

ஒக்கி புயல் மீட்பு பணியை குறித்து தமிழக அரசு மனு தாக்கல்