ads

இயக்குனர் அமீருக்கு கைகொடுத்த யுவன் சங்கர் ராஜா

yuvan shankar raja released by achamillai achamillai teaser

yuvan shankar raja released by achamillai achamillai teaser

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'சேது' படத்தின் மூலம் இயக்குனர் அமீர் திரையுலகிற்கு அறிமுகனார்.அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளிவந்த 'ராம்' படத்தின் மூலம் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் போன்ற பணிகளை முதல் முறையாக அமீர்  மேற்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய பருத்தி வீரன், ஆதி பகவான் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இதற்கு அடுத்த படியாக இயக்குனர் அமீர் தற்பொழுது புதுமுக இயக்குனர் முத்துகோபால் இயக்கி வரும் ‘அச்சமில்லை அச்சமில்லை' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தினை இயக்குனர் அமீர் தனது ‘டீம் வொர்க் புரொடக்ஷன் ஹவுஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தினை தயாரித்து நாயகனாக நடித்தும் வருகிறார்.      

இந்த படத்திற்கு அருண் குமார் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இவருடன் இணைந்து விவுரி குமார் ஒளிப்பதிவாளராகவும்,  அதியப்பன் சிவா படத்தொகுப்பாளராகவும்    ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமீருடன் இணைந்து இயக்குநர் முத்துகோபால், ஹரிஷ், சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். கடந்த நாட்களில் வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. தற்பொழுது படத்தின் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் பாடலை வருகிற 24ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.      

இயக்குனர் அமீருக்கு கைகொடுத்த யுவன் சங்கர் ராஜா