வீரம் கூட்டணியில் தொடரும் விஸ்வாசம்

       பதிவு : Dec 04, 2017 17:12 IST    
Veeram Movie Still Veeram Movie Still

வீரம், வேதாளம், விவேகம் படத்தினை தொடர்ந்து சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்தின் 58வது படத்தினை இயக்கவிருக்கிறார். தற்பொழுது வந்த படங்களில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வந்தார். இந்த படத்தில் சால்ட், பெப்பர் லுக்கிக்கை தொடராமல் இளமையான தோற்றத்தில் நடிப்பதோடு எடையும் குறைத்து சூப்பர் லுக்கில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார்.    

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'விஸ்வாசம்' என்ற தலைப்பினை வைத்து சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர். டைட்டில் வெளிவந்த சில மணி நேரத்தில் வலைதளங்களில் இந்திய அளவில் ட்ரெண்டானது. தற்பொழுது படத்திற்கான நாயகி, மற்றும் நடிகர், நடிகைக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது.

 

இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி 'வீரம்' படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்தவர் பாலா, விஸ்வாசம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாரம். இந்த தகவலை மலையாள சினிமாவின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலாவே வெளியிட்டுள்ளார். 


  

 


வீரம் கூட்டணியில் தொடரும் விஸ்வாசம்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்