ads

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராகவா லாரன்ஸ்

vaa thalaiva vaa thalaiva song release by ragahava

vaa thalaiva vaa thalaiva song release by ragahava

தமிழ் சினிமா திரையுலகில் இயக்குனர், முன்னணி நடிகர், நடன இயக்குனர் என திறமைகளை கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்பொழுது அதிரடி த்ரில்லர் படமான 'காஞ்சனா 3 (முனி 4)' படத்தினை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக் பாஸ் ஓவியா மற்றும் வேதிகா என இரு நாயகிகள் களமிறங்கியிருக்கியுள்ளனர். இவர்களுடன் இணைந்து நிக்கி டம்பொலி, கோவைசரளா, மனோ பாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி என பலர் நடித்து வருகின்றனர்.  

நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த தகவல்.  சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வருவதை குறித்த தகவலை வெளியிட உள்ளார். இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் பேசும் போது ‘போர் வரும்போது பார்க்கலாம்’ என தெரிவித்துள்ளார். இன்று ஐந்தாவது நாளாக தொடரும் இந்த சந்திப்பில் அரசியல் பயணம் பற்றிய தகவலை தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்பும் விதமாக ராகவா லாரன்ஸ் அவரது ட்விட்டரில் 'வா தலைவா வா' என்ற ஸ்பெஷல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மாதேவன் என்பவர் எழுதியுள்ள இப்பாடலை வெளியிட்டதோடு லாரன்ஸ் இந்த பாடல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்று பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த பாடல் வலைத்தளத்தில் வரலாகிறது.         

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராகவா லாரன்ஸ்