ads
காஞ்சனா 3 படத்தின் புதிய தகவல்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 04, 2017 16:10 ISTபொழுதுபோக்கு
மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். முன்பு வெளிவந்த முனி 1,2,3 படங்களின் வரவேற்புகளிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் காஞ்சனா 3 (முனி 4) படத்தினை லாரன்ஸே இயக்கி, நாயகனாக நடித்து வருகிறார். மேலும் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரித்தும் வருகிறாராம்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த தகவலில் பிக் பாஸ் ஓவியா படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், இதனால் தயாரிப்பாளர் ஓவியா மீது தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் அளித்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருத்து. இந்த தகவலை முறியடிக்கும் விதமாக லாரன்ஸ், ஓவியா இருவரும் படப்பிடிப்பின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து தற்பொழுது 50% வரை நிறைவு பெற்றதாக தகவல் வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் படத்தின் போஸ்டர், டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்க படுகிறது.