ads

கயல் சந்திரனுக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்

kayal chandran movie heroine

kayal chandran movie heroine

கயல் படத்தின் மூலம் அறிமுகமான சந்திரன் தற்பொழுது சில படங்களில் நடித்து முன்னேறி வருகிறார். இந்நிலையில் ரூபாய், பார்ட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தினை தொடர்ந்து 'தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதிகளவு காமெடிகள், காதல் போன்றவை மையமாக கொண்டு 'டாவு' படத்தினை எடுக்கவிருக்கின்றனர். இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. கயல் சந்திரன் நடித்துள்ள ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத் தயாரிப்பாளர் பி.எஸ்.ரகுநாதன், ‘Two Movie Buffs’ பட நிறுவனம் சார்பில் 'டாவு' படத்தினை தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தில் சந்திரனுடன் இணைந்து முனீஸ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா போன்றவர்கள் நடிப்பதாகவும், நாயகியின் தேர்வு நடைபெற்று இருப்பதாகவும் தகவல்கள் வந்திருந்தது. இந்நிலையில் நாயகியின் தேர்வு முடிவடைந்தது. கயல் சந்திரனுக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கவுள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி நடித்த ‘ஜேக்கபின்டெ சொர்க்க ராஜ்ஜியம்’ மலையாள படத்தில் ரெபா மோனிகா ஜான் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.   

கயல் சந்திரனுக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்