ads

உதயநிதியுடன் இணையும் 'விக்ரம் வேதா' நாயகி

shraddha srinath joined uthayanidhi stalin new movie

shraddha srinath joined uthayanidhi stalin new movie

இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவர உள்ள படம் நிமிர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உதயநிதியின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. நடிகர் விஷால் தற்பொழுது நடித்து வரும் 'இரும்பு திரை' படத்தினை இயக்கிவரும் இயக்குனர் மித்ரனுடன் உதயநிதி இணைவதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தில் இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கவுள்ளார்.  

இந்த தகவலுக்கு முன்னதகவே உதயநிதி 'தர்மதுரை' இயக்குனர்  சீனு ராமசாமியுடன் இணைய போவதாக செய்தி வெளிவந்திருந்து. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 19ல் துவக்கவிருப்பதாக தகவலில் வெளிவந்திருந்தது. இந்நிலையில் மற்றொரு புது படத்தில் கமிட்டாகி உள்ள உதயநிதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதற்கு பிறகே இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் இணைவதாக தெரிகிறது.   

 

உதயநிதியுடன் இணையும் 'விக்ரம் வேதா' நாயகி