ads

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்திற்கான தகவல்

uthayanidhi stalin new movie

uthayanidhi stalin new movie

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் 'இப்படை வெல்லும்' படம் நவம்பர் 9-இல் வெளியானது. இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் சார்பில் ஏ.சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் நவம்பர் 9-இல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து படம் வெளியான போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் சட்ட விரோதமாக படத்தை வெளியிட்டதாக தமிழ் ராக்கர்ஸ் போன்ற இரண்டு இணையதளம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் "என்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 19-இல் தொடங்கவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்திற்கான தகவல்