ரசிகர்களிடம் மஞ்சிமா மோகனின் வேண்டுகோள்

       பதிவு : Nov 10, 2017 17:30 IST    
ரசிகர்களிடம் மஞ்சிமா மோகனின் வேண்டுகோள்

கவ்ரவ் நாராயணன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த இப்படை வெல்லும் படத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்கே சுரேஷ், கவ்ரவ் மற்றும் சிலர் நடித்து உருவாக்கி இருந்த அதிரடி காதல் படத்தினை நேற்று வெளியிட்டனர்.       

இந்நிலையில் கடந்த வாரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணத்தினால் மஞ்சிமா மன்னிப்பு கேட்டதாகவும், குயின் படத்தின் ரீமேக் காரணத்தினால் அடுத்த 30 நாட்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.     

 

இதனை தொடர்ந்து படக்குழுவினர், படத்திற்கு துணையாக இருக்கும் பத்திரிகை நிறுவனம், ஊடகம் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்த மஞ்சிமா ரசிகர்களுக்கும் வேண்டுகோள்விடுத்துள்ளார். படத்தை திரையறுங்குகளில் பார்க்கும் படியும், திருட்டு டிவிடி, இணையதளம் போன்றவற்றில் பார்ப்பதை தவிக்கும் படியும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.       


 

 


ரசிகர்களிடம் மஞ்சிமா மோகனின் வேண்டுகோள்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்