ads
தானா சேர்ந்த கூட்டம் மூன்றாவது சிங்கில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 22, 2017 09:40 ISTபொழுதுபோக்கு
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இப்படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்து உள்ளது.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரைபட நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர். மேலும் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து இது வரை வெளிவந்த சொடக்கு மேல 'சொடக்கு போடுது, நானா தானா' போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான 'பீலா பீலா' விரைவில் வெளிவரும் என்று படகுழு தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
இன்று வெளிவந்த புதிய தகவல் :
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பீலா பீலா மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 7மணிக்கு வெளிவரவுள்ளது. இந்த தகவல் வெளிவந்ததில் இருந்து சூர்யா ரசிகர்கள் வலைத்தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றனர்.