ads
தானா சேர்ந்த கூட்டம் புதிய தகவலை வெளியிட்ட ஸ்டுடியோ க்ரீன்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 18, 2017 09:47 ISTபொழுதுபோக்கு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கிய படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர், இசை, டீசர் போன்றவை வெளிவந்து உலகளவில் ட்ரெண்டானது. மேலும் இந்த படத்தை 'கேங் ' என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியிட உள்ளனர்.
இப்படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கும் இந்நிலையில் படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு முழுவதும் படத்தின் விநியோகத்தினை பரதம் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் வெளியிடுவதாக தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளது.