ads

முதல் முறையாக சூர்யா தெலுங்கில் செய்த சாதனை

gang teaser likes

gang teaser likes

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் போஸ்டர், இசை, டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தினை தெலுங்கிலும் 'கேங்' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர். விஜய்க்கு அடுத்த படியாக சூர்யாவும் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு வட்டாரத்தை பிடித்துள்ளார். இதனால் தெலுங்கு திரையுலகிலும் இப்படத்திற்கான வரவேற்புகள் அதிகரித்துள்ளது 

 இது வரை சூர்யா நடித்து தெலுங்கில் டப் செய்து வெளிவந்த படங்கள் அனைத்தும் மற்றொருவர் டப் செய்யப்பட்டது. முதல் முறையாக 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் மூலம் சூர்யாவின் சொந்த குரலில் டப் செய்யப்பட்டிருப்பதாக படக்குழு கூறியுள்ளனர். தெலுங்கில் நேற்று வெளிவந்த டீசரில் சூர்யாவின் டப்பிங் நல்ல முறையில் வந்திருப்பதாக தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். 

மேலும் இந்த படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன்,கார்த்திக் உள்ளிட்டோர் தெலுங்கு திரையுலகில் முன்னதாகவே அறிமுகமானவர்கள் என்பதால் படத்தின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.   

முதல் முறையாக சூர்யா தெலுங்கில் செய்த சாதனை