ads

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு

thaana serntha kootam dubbing

thaana serntha kootam dubbing

நானும் ரௌடிதான் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்பட்டத்தில் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் இணைத்துள்ளனர்.           

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடல் இன்றளவும் வலைத்தளத்தில் ரசிகர்களால் புது விதத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இப்படத்தில் இருந்து தமிழ், தெலுங்கு என மொழிகளிலும் வெளிவந்த போஸ்டர், டீசர், இசை போன்றவை நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.      

இந்நிலையில் படத்தின் அனைத்து வித டப்பிங் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த அதிகார பூர்வ தகவலை படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டதோடு, நடிகர் கார்த்திக் டப்பிங் முடிவடைந்த பின்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.     

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு